நமது ஊரில் உள்ள மாணவர்கள், மற்றும் வாலிபர்கள் சாயங்காலம் கிரிக்கெட், கைபந்து போன்ற விளையாட்டுக்கள் விளையாடி வந்தனர். இது அவர்களுக்கு ஒரு உடற்பயற்சி போலிருந்தது. ஆனால் தற்போது எல்லோரும் விளையாட்டை மறந்து செல்போன் பக்கம் சென்று விட்டனர். இதனால் போதிய உடற்பயற்சி இல்லாமல் பிற்கால சந்ததிகள் நோய்வாய்பட வாய்ப்புள்ளது.
இதுபற்றி செய்யத் கஸ்ஸாலி அவர்கள் கூறுகையில், இப்போதெல்லாம் யாரும் விளையாட வரமாட்டேன்கிறார்கள், அது மட்டுமின்றி போதிய விளையாட்டு உபகரணங்களும், மைதானமும் இல்லை. ஆதலால் பெரியவர்கள் சிறியவர்களை உற்சாகபடுத்தி விளையாட்டை மேம்படவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை"