Thursday, October 25, 2012

மாயாகுளத்தில் குரங்கின் அட்டகாசம்!!

மாயாகுளத்தில் கடந்த ஒரு சில வாரமாக ஊருக்குள் குரங்கு ஒன்று வந்து அட்டகாசம் செய்வதாக ஊரில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த குரங்கு சில வீடுகளுக்கு சென்று சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு விடுவதாகவும், இன்னும் சில வீட்டுக்கு சென்று கதவை தட்டுவதாகவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.

இது பற்றி ஊரில் உள்ள பெரியவர்கள் கூறும் போது இந்த குரங்கினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பயபடுகிறார்கள், ஆதலால் வனத்துறைக்கு தகவல் கொடுத்து அந்த குரங்கை பிடித்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஒரு சில சிறுவர்கள் பயந்தாலும் பல சிறுவர்கள் அந்த குரங்கை விரட்டி விளையாடி ஆனந்தம் அடைகின்றனர் என்பதுதான் நிதர்சமான உண்மை...

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html