Friday, January 18, 2013

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணத்தில் வேலை வாய்ப்பு

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது

இது குறித்து முழு விபரம் அறிய http://chennaimetrorail.gov.in/jobposting.php 

http://chennaimetrorail.gov.in/Advt-01-2013.pdf

Thursday, January 17, 2013

'குட் நியூஸ்'.. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 12 ஆக உயர்கிறது!

டெல்லி: வீட்டு உபயோகத்திற்காக வழங்கும் மானியவிலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் 50 ரூபாய் உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து மானியம் அல்லாத விலையில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருவதால் மானியவிலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மந்திரி சபையின் இறுதி முடிவுக்காக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தற்போது மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு ரூ.130 உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை மாதந் தோறும் ரூ.50 என்ற அளவில் உயர்த்தலாமா என ஆலோசிக்கப்படுகிறது.
டீசல் விலை உயரும்:
அதேபோல் டீசல் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.4.50 என உயர்த்தாமல் 4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை மாதம் 60 பைசாவிலிருந்து ரூ.1.50 வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

For more details about mayakulamnews

Wednesday, January 16, 2013

முஹம்மது சதக் பாலிடெக்னிக் க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை வாய்ப்பு முகாம்!

முஹ‌ம்ம‌து ச‌தக் பாலிடெனிக் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் ....
முஹ‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரியில் வெளிநாட்டு நிறுவ‌ன‌மான‌ அவ‌லான் டென்க்னால‌ஜியில் ப‌ணி புரிய‌ வேலை வாய்ப்பு முகாம் 20 1 2013 அன்று ஞாயிற்று கிழ‌மை காலை 9 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெறுகிற‌து.


இத்தேர்வில் டிப்ள‌மா மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் ம‌ற்றும் தொட‌ர்பிய‌ல் துறை ம‌ற்றும் எலக்ட்ராணிக்ஸ் இன்சுமென்ரேச‌ன் ப‌டித்து 2010/2011/2012 தேர்ச்சியடைந்த‌வ‌ர்க‌ள்/தேர்ச்சிய‌டையாத‌வ‌ர்க‌ள்,ஐடிஐ ம‌ற்றும் டிகிரி பிஏ பி.எஸ்.சி முடித்த‌வர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன‌டையலாம்.தேர்வுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3, க‌ல்வி சான்றித‌ழ் ம‌ற்றும் வ‌ய‌து சான்றித‌ழ் ந‌க‌ல்க‌ளுட‌ன் வ‌ர‌ கேட்டு கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இம்முகாமிற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி சார்பில் முத‌ல்வ‌ர் பேராசிரிய‌ர் அலாவுதீன் ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் சேக் தாவுது உள்ளிடோர் செய்துள்ள‌ன‌ர்.

Thursday, October 25, 2012

மாயாகுளத்தில் குரங்கின் அட்டகாசம்!!

மாயாகுளத்தில் கடந்த ஒரு சில வாரமாக ஊருக்குள் குரங்கு ஒன்று வந்து அட்டகாசம் செய்வதாக ஊரில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த குரங்கு சில வீடுகளுக்கு சென்று சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு விடுவதாகவும், இன்னும் சில வீட்டுக்கு சென்று கதவை தட்டுவதாகவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.

இது பற்றி ஊரில் உள்ள பெரியவர்கள் கூறும் போது இந்த குரங்கினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பயபடுகிறார்கள், ஆதலால் வனத்துறைக்கு தகவல் கொடுத்து அந்த குரங்கை பிடித்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஒரு சில சிறுவர்கள் பயந்தாலும் பல சிறுவர்கள் அந்த குரங்கை விரட்டி விளையாடி ஆனந்தம் அடைகின்றனர் என்பதுதான் நிதர்சமான உண்மை...

Monday, October 22, 2012

வெளிநாட்டில் ப‌ணிபுரிவ‌ர்க‌ளை புதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கையில் சேர்ப்ப‌து எப்ப‌டி !அதிகாரி விள‌க்க‌ம்!

வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் விடுப‌ட்டுள்ள‌ வெளிநாட்டில் ப‌ணி ப‌ரிபுவ‌ர்க‌ளை எப்ப‌டி வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் சேர்ப்ப‌து என்று அதிகாரிக‌ளிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது,

 மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ப‌தில‌ளித்த‌ போது,


வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.

Thursday, September 27, 2012

மாயாகுளத்தில் ம‌ழை !


மாயாகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வ‌ந்த‌ நிலையில் நேற்று இர‌வு (27-09-12 ) ம‌ழை பெய்ய‌ தொடங்கிய‌து.சுமார் 3 மணி நேரம் ம‌ழை நீடித்தது. இத‌னால் சுற்று வட்டார பகுதியில் நில‌வி வ‌ந்த‌ உஷ்ன‌ம் தணிந்துள்ள‌து. சில‌ மாத‌ங்க‌ளாக‌ க‌டும் வெப்ப‌ம் நில‌வி வ‌ந்த‌தால் மாயாகுளம் மற்றும் அத‌ன் சுற்றுப‌குதிக‌ளில் நீர் வ‌ள‌ம் குறைந்துள்ள‌ நிலையில், தொட‌ர்ந்து ம‌ழை பொழிய‌ வேண்டும் என்ப‌தே அனைவ‌ரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Monday, September 3, 2012

மாயாகுளத்திற்கு பெருமை தேடி தந்த ஜனாப்.SMH.சேக் முஹம்மது அவர்கள்

நமது ஊரை சேர்ந்த ஜனாப். SMH.சேக் முஹம்மது அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் AMERICAN UNIVERSITY மூலம் இயங்கி வரும் "NEW INTERNATIONAL CHRISTIAN COLLEGE " சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கிறேன்.....

AFFILIATED BY: 
  • UNITED NATIONS AS INTERNATIONAL ORGANIZATION. 
  • UNITED NATIONSGLOBAL COMPACT AS GLOBAL ORGANIZATION.
  • UNITED NATIONS ACADEMY IMPACT. 
  • EUROPEAN COMMISSION-AS INTERNATIONAL ACADEMY. 
  • INTERNATIONAL BLUE CROSS (UK) 
  • POWER MINISTRIES INTERNATIONAL (USA) 
  • WORLD PEACE ORGANIZATION (USA)

அவர்களுக்கு இறைவன் மேலும் பல பதவிகளை வழங்குவதற்கும், நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் வழங்கி மேலும் சேவைகள் செய்ய சஹோதரர்கள் துவா செய்யுங்கள்.
google-site-verification: googlee59dddba6405f270.html