டெல்லி: வீட்டு உபயோகத்திற்காக வழங்கும் மானியவிலை சமையல் எரிவாயு
சிலிண்டர்களை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. அதே சமயம் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் 50 ரூபாய்
உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் சமையல் கேஸ் சிலிண்டர்களின்
எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல்
தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து மானியம் அல்லாத விலையில்
சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருவதால் மானியவிலை சிலிண்டர்களின்
எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை
மந்திரி சபையின் இறுதி முடிவுக்காக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும்
வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு
ரூ.130 உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை மாதந் தோறும் ரூ.50 என்ற
அளவில் உயர்த்தலாமா என ஆலோசிக்கப்படுகிறது.
டீசல் விலை உயரும்:
அதேபோல் டீசல் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.4.50 என உயர்த்தாமல் 4
மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை மாதம் 60 பைசாவிலிருந்து ரூ.1.50 வரை
உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
For more details about mayakulamnews
No comments:
Post a Comment