பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண்ணாக 181
அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணைப் பயன்படுத்தவும் மத்திய
அரசு வகை செய்துள்ளது.
இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், "நாடு முழுவதும் பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இது தொடர்பாக, 181 என்ற மூன்று இலக்க எண்ணை அனைத்து மாநிலங்களிலும், பெண்களுக்கான அவசர உதவி எண்ணாகச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு கபில் சிபல் கடிதம் மூலம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்க வேண்டும். தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பெண்களுக்கான அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு, எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment