ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மதுரை யாதவா கல்லூரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் வள மீன் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி மண்டபம் கடல்வள மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் தலைமை வகித்தார். பயிற்சி முகாமை மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜி.கோபகுமார் துவக்கி வைத்துப் பேசினார்.
இதில் இன்டெல் ஆராய்ச்சி தொழில்நுட்ப சேவை அமைப்பின் பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஹன்னா முருகன், யாதவா கல்லூரியின் மற்றொரு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.யசோத்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் பேசியது:
மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களைத் தேர்வு செய்து அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான பயிற்சி ஜன.21 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறோம். பயிற்சி முகாமில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 75 பேர் பங்கேற்கின்றனர்.
இதில் நானோ சென்சார் மற்றும் ரோபாட், வானவியல் மற்றும் கணித ஆராய்ச்சிகள், ஜின் தொழில்நுட்பம், புற்று நோய், சூரிய சக்தி, உயிர் சக்தி, தண்ணீர் சேமிப்பு மற்றும் இயற்கைப் பாதிப்பு, மேஜிக் மூலம் அறிவியலை பரப்புதல், ஜீன் மாற்றமடைந்த தாவரம் ஆகியவை குறித்து அந்தந்தத் துறைகளில் தலை சிறந்த விஞ்ஞானிகள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் இளம் வயதிலேயே விஞ்ஞானிகளாக மாற்ற முடியும் என்பதற்கான பயிற்சியே இதுவாகும் என்றார்.

No comments:
Post a Comment